SRM பொறியியல் மற்றும் அறிவியல் நிறுவனம் 10-வது ஆண்டு விழா

SRM பொறியியல் மற்றும் அறிவியல் நிறுவனம் 10-வது ஆண்டு விழா

SRM பொறியியல் மற்றும் அறிவியல் நிறுவனம், வடபழனி வளாகத்தின் 10வது ஆண்டு விழா மார்ச் 22 அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

கல்லூரி முதல்வர் முனைவர் க. துரைவேலு அவர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்புரை ஆற்றினார்.
 
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக டிசிஎஸ் நிறுவனத்தின் RMG - சென்னை மண்டலத்தின் தலைவர் திரு. வேணு உப்பாலபட்டி மற்றும் தமிழ்த்திரைப்பட இயக்குனர் திரு. விஜய் கலந்துக் கொண்டனர். மேலும் SRM பொறியியல் மற்றும் அறிவியல் நிறுவனத்தின் துனைவேந்தர் முனைவர். சஞ்சய் சாஞ்செட்டி, பதிவாளர் முனைவர் சேதுராமன் , SRM குழும நிர்வாகி திரு. சந்திரகுமார் இ.ஆ.ப (ஓய்வு), ஆகியோர் கலந்துகொண்டனர் இவ்விழாவில் சிறப்பாக உரையாற்றிய சிறப்பு விருந்தினர் திரு. வேணு உப்பாலபட்டி, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மேலும் மின்னணு பொறியியல் துறை பட்டதாரியான அவர் மின்னணு துறையில் வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்ப வளர்ச்சிகள் மற்றும் விருட்சுவல் ரியாலிட்டி, ஜடி துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், அதற்கு மாணவர்கள் எவ்வாறு தங்களை தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும் அதற்கான வாய்ப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். 

மேலும் விழா உரை நிகழ்த்திய இயக்குனர் விஜய், மாணவர்கள் கல்வி மட்டுமின்று பல்வேறு துறைகளில் தங்களது திறைமைகளை வெளிக் கொணர கடிண உழைப்பால் மட்டுமே முடியும் என வலியுறுத்தினார். 

இவ்விழாவில் கல்லூரியில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவியர்க்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவை தொடர்ந்து மாணவ மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அறங்கேறின. கலைநிகழ்ச்சிகளுக்கு பிக்பாஸ் புகழ் பிரபல தமிழ்த்திரைப்பட நடிகர் திரு. ஹரிஷ் கல்யாண் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பு செய்தார். இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்துக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியின் நிறைவில் இசிஇ துறையின் தலைவர் முனைவர் சி. கோமதி அவர்கள் நன்றியுரை தெரிவித்து நிகழ்ச்சியினை இனிதுடன் நிறைவு செய்தார்கள்.