தூய்மை இந்தியா கோடைகால தூய்மைப்பணி திட்டம் – 2018

"தூய்மை இந்தியா" திட்டத்தில் கீழ் "கோடைக்கால தூய்மை பனி முகாம்" எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம், அஞ்சூர், அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 15 நாட்களாக சிறப்பாக முழுஅர்ப்பனிப்பு விழிப்புணர்வுடன் நடத்தினார்கள் இதையொட்டி பல்வேறு போட்டிகள், சுவரோவியம் மற்றும் பள்ளி வளாகத்தினுள் நிறைய மரங்களை நட்டும் மாணவர்களுக்கு "தூய்மைஇந்தியா" வைநோக்கி இயல்பாககொண்டு சென்றனர் மிகவும் பயனுள்ளதாகவும், ஊக்க முள்ளதாகவும் இருந்த இம்முகாம் நிறைவுவிழா பள்ளிவளாகத்தினுள் 29.06.2018 வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணி அளவில் மிகசிறப்பாக நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு எஸ்.ஆர்.எம். மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர்.திரு.A.சுந்தரம், அவர்கள் தலைமை தாங்கினார். டாக்டர். M.லோகராஜ், மக்கள் நலத்துறை தலைவர் வாழ்த்துரை ஆற்றினார். அதன்பிறகு திரு.வ.திருமுருகன், எஸ்.ஆர்.எம், கூடுதல் இயக்குனர் மற்றும் SBSI தலைமை ஒருங்கிணைப்பாளர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார். மேலும் விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் வண்டலூர் காவல்துணைகண்காணிப்பாளர் திரு.M.S.M.வல்லவன் விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு இத்திட்டத்தினை கூறி ஊக்கமளித்தார். அதனை தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றமாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.