SRMIST இல் 4.03 கோடி செலவில் XPS வசதி

SRMIST இல் 4.03 கோடி செலவில் XPS வசதி

எக்ஸ்-ரே ஃபோட்டோ எலக்ட்ரான்ஸ் பெக்ட்ரோஸ்கோபி பற்றிய கருத்தரங்கம்

எக்ஸ்-ரே ஃபோட்டோ எலக்ட்ரான்ஸ் பெக்ட்ரோஸ்கோபி (XPS) வசதி தற்பொழுது காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தில், ஹை-ரெசல்யூசன் டிரான்ஸ்மிசன் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் (High Resolution Transmission Electron Microscope,HRTEM),ஃபீல்டு எமிசன் ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் (Field Emission Scanning Microscope, FESEM),வைப்ரேட்டிங் சாம்பிள் மேக்னோட்டோமீட்டர் (Vibrating Sample Magnetometer,VSM), எக்ஸ்ரே டைபிராக்டோமீட்டர் (X-ray Diffractometer, XRD), ஸ்கேனிங் ப்ரோப் மைக்ராஸ்கோப், (Scanning Probe Microscope,SPM),கேஸ்-குரோமடோகிராபி மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி(Gas Chromatography Mass-Spectrometry -GCMS),ஹை-ரெசல்யூசன் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி( High Resolution mass Spectometry, HRMS), நியூக்கிளியர் மேக்னடிக் ரெசனன்ஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் (Nuclear Magnetic Resonance Spectrometer, NMR-500MHZ), முதுகெலும்பை ஆய்வு செய்யும் ஆறு அச்சுகள் கொண்ட இயந்திரம் (Six Axis Modular spine Testing Machine) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கு உதவும் உயரிய திறன்கணினி(Super Computer)உள்ளிட்ட ஆராய்ச்சி வசதிகள் உள்ளன. 

வேதியியல் பகுப்பாய்வுக்கான எலக்ட்ரான்ஸ் பெக்ட்ரோஸ் கோபி (XPS)என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் மேம்பட்ட மேற்பரப்பு பகுப்பாய்வுநுட்பம். இது ரசாயனக் கூறு, இரசாயன நிலை மற்றும் இரசாயனப்பிணைப்பு தகவலை அனைத்துப் பொருட்களின் மேற்பரப்புகளிலிருந்து வழங்குகிறது. இந்த வசதியானது 4.03 கோடி செலவில் SRM கல்வி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. 

24-04-2019 அன்று, புதுதில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநர் டாக்டர் டி.கே. ஆஸ்வால் அவர்கள் XPS வசதியைத் திறந்து வைத்தார். மேலும், எக்ஸ்-ரே ஃபோட்டோ எலக்ட்ரான்ஸ் பெக்ட்ரோஸ்கோபி தொடர்பான கருத்தரங்கில் ஆய்வு மாணவர்களுக்கும், புலம் சார்ந்தவர்களுக்கும் இதுபற்றி உரையாற்றினார். தொடர்ந்து அவர், SRMIST இல் XPS வசதிகளை நிறுவுவதன் மூலம் சோலார்செல்கள், லித்தியம்-அயன்பேட்டரிகள், தெர்மோ எலக்டிரிக்ஸ், மின்னணு சாதனங்கள் (உணரிகள், டிரான்சிஸ்டர்கள், ஒளி உணரிகள் மற்றும் ஒளி உமிழும் டையோடுகள்) மற்றும் நானோபடிகங்கள் (காற்று வடிகட்டிகள், வினையூக்கி) போன்ற துறைகளில் ஆராய்ச்சி புரியும் ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், அறிவியலறிஞர்கள் முழுஆற்றலுடன் மேம்பட்ட ஆய்வினை மேற்கொள்ள வழி அமைக்கும், அணுக்களின் இரசாயன நிலை மற்றும் பருப்பொருட்களின் கட்டமைப்பை நுட்பமாகப் புரிந்துகொள்ள உதவும் என்றும்.  இதன் மூலம் ஆய்விதழ்களில் வரும் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் காப்புரிமைகள் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறினார்.  

SRMIST-யின் இயக்குநர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் அவர்கள் குறிப்பிடும் பொழுது,  ஐ.ஐ.டி. சென்னை போன்ற உயர்தரமிக்க கல்வி நிறுவனங்களில் உள்ளதை விடவும் மேம்பட்ட ஸ்கேனிங் XPS மைக்ரோப்ரோப் (Scanning XPS Microprobe) மற்றும் அல்ட்ரா வைலட்ஸ் பெக்ட்ரோஸ்கோபி (UPS) என்ற சிறப்பம்சங்கள் கொண்ட XPS இயந்திர வசதி தற்பொழுது SRMIST-யில் நிறுவப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர், சுற்றுச்சூழல் மாசுபாடு (வாகன உமிழ்வு அல்லது நீர் மாசுபாடு), தொழில், ஆற்றல் உருவாக்கம் மற்றும் சேமிப்பு, சுகாதார பராமரிப்பு, மருந்து துறை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள பொருட்களின் மேற்பரப்பு மாசுபடுதல் மற்றும் இரசாயனநிலை போன்ற பல தொழில்துறை சிக்கல்களை XPS வசதியைக் கொண்டு கண்டறியலாம் என்றார்.

இதுபோன்ற மேம்பட்ட நுட்பங்களைக் கொண்டு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கான செயல்பாட்டு மற்றும் பகுப்பாய்வு பயிற்சிகளை அவர்களது பாடத்திட்டத்தில் வழங்குவதன் மூலம், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைகளில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.

இந்த XPS வசதியை மற்ற கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் இணையம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளமுடியும். மேலும் நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒவ்வொரு பருவத்திலும் பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சியளிக்கப்படும்.