எஸ்.ஆர்.எம் பல்கலையில் வேதியியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கம்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில் வேதியியல் துறையில் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்தான சர்வதேச கருத்தரங்கம் (ICRAMC -2019) வருகிற பிப்ரவரி 13 முதல் 15, 2019 வரை காட்டாங்குளத்தூர் வளாகத்தில் சிஇஏ பிரான்ஸ் அமைப்புடன் இணைந்து நடத்தப்படுகிறது. இக் கருத்தரங்கினை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் மற்றும் சிஎஸ்ஐஆர் போன்ற அமைப்புகளும் இணைந்து வழங்குகின்றன.
இந்த கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் ஐந்து அமர்வுகளில் விவாதிக்கப்படுகின்றன. இக் கருத்தரங்கில் பிரான்ஸ் ,யுஎஸ்ஏ, தென் கொரியா , தைவான் ,சைல் ,சைனா ஜப்பான் , தாய்லாந்து மற்றும் துருக்கி போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்ப்பாளர் வருகின்றனர்.
இக் கருத்தரங்கின் நோக்கம் வேதியியல் துறையில் அண்மைக்கால ஆய்வுகள் மற்றும் முன்னேற்றங்கள் ,புது வழி முறைகள் குறித்தும் உலக அளவில் தற்போதைய தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கினை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் துவக்கி வைக்க அவரை தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்செட்டி தலைமை வகித்தார். கருத்தரங்கின் நோக்கவுரையை வேதியியல் துறைத்தலைவரும் கருத்தரங்கின் அமைப்பாளருமான டாக்டர் அர்த்தநாரீஸ்வரி அவர்கள் வழங்கினார் பின்னர் டாக்டர் அனந்தநாராயணன் வரவேற்புரை வழங்கி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். விழா நிறைவாக இணை பேராசிரியர் டாக்டர் மகாலிங்கம் நன்றியுரை வழங்கினார்.
உலக அளவில் முக்கியமான அறிவியலாளர்களும் ஆராய்ச்சி அறிஞர்களும் கலந்து கொண்டனர்.