தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரியில் கணினித்தமிழ் பாடத்திட்டம் அறிமுகம்

தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரியில் கணினித்தமிழ் பாடத்திட்டம் அறிமுகம்
தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரியில் கணினித்தமிழ் பாடத்திட்டம் அறிமுகம்

ஒருநாள் தேசிய அளவிலான "கணினித்தமிழ்" கருத்தரங்கம்


தமிழின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காகவும், கணித்தமிழ் விழிப்புணர்வு அளிக்கும் நோக்கிலும், அனைத்துத் துறை மாணவர்களும் மேற்கொள்ளும் ஆய்வுத்திட்டங்களையும், உள்பயிற்சிகளையும் கணித்தமிழ் சார்ந்து மேற்கொள்ள வகை செய்யும் நோக்கத்திலும் மற்றும் கணினித்தமிழின் அடிப்படையும், பயன்பாட்டையும் கற்றுக்கொள்ளும் வகையில், தேசிய அளவிலான, கணினித்தமிழ் கருத்தரங்கம் என்ற பெயரில்,பல்வேறு கல்லுாரி  மாணவர்களுக்கு, SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின்  பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் கணித்தமிழ்ப் பேரவை மற்றும் இந்தியக் கணினிச் சமுதாய அமைப்பின் காஞ்சிபுரம் மண்டலம் இணைந்து 12.03.2020 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது.

கணித்தமிழ் விழிப்புணர்வு அளிக்கும் நோக்கத்தில் ,தன்னாட்சிபெற்ற இக்கல்லூரியில் கணினித் தமிழ்பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் எளிதில் தொழில்நுட்பங்களை பற்றி தெரிந்துகொள்ளவும், தொழில்நுட்ப அறிவைமேம்படுத்தவும் ,அனைத்துதுறைச் சார்ந்த தொழில்நுட்பச் சொற்கள், தொழில்நுட்பக் கருத்துக்கள், துறைச் சார்ந்த மென்பொருள்களின் செயல்பாடுகள் மற்றும் அதை கணினியில் நிறுவும் முறைகள், அறிவியல் சார்ந்த செய்திகள் ஆகியவற்றை தமிழ்மொழியில் தயார் செய்து பொறியறி என்ற தொழில் நுட்பத்தமிழ் இதழ் பன்னாட்டு செந்தரபுத்தக எண்ணுடன் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியரும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தொடர்பங்களிப்பை அளித்துவரும் முனைவர் தமிழ்ப் பரிதிமாரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கருத்தரங்கில் தமிழ் விக்கிபீடியாவும் மற்றும் கட்டற்ற பண்பாடும், தமிழ்க் கணிமை தேவைகளும் வாய்ப்புகளும், தமிழிணையம் தேவைகளும் வாய்ப்புகளும் ,இன்றைய கணினி பொறியியல் தொழில் நுட்பத்தில் தமிழ் போன்ற பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடைப்பெற்றது. இந்நிகழ்வானது SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 

இயக்குனரும், SRM பல்கலைக்கழக இணைத் துணைவேந்தருமான முனைவர் தி.பொ.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.சிதம்பரராஜன் மற்றும் துணை முதல்வர் முனைவரும்  .முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.கணினி பொறியியல் துறையின் உதவிப் பேரராசிரியர் சண்முகம் அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.