SRM பல்கலைகழகத்தின் TUPSUD 2017

SRM பல்கலைகழகத்தின் TUPSUD 2017
SRM University Organizing a International Seminar on Sustainable Development and Environment Management

“நகர வடிவமைப்பு வெகுவான மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் நிர்வாகத்தின் நிலைப்பாடுகள் (Trends in Urban Planning, Sustainable Development and Environment Management)"

“நகரவடிவமைப்பு வெகுவான மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் நிர்வாகத்தின் நிலைப்பாடுகள் என்கின்ற சிந்தனையை முன்வைத்து சென்னை தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தேசிய கல்விக்கழகத்துடன் இணைந்து காட்டாங்குளத்தூர் வளாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் கட்டடவியல் துறைசர்வதேச அளவிலான ஒருநாள் கருத்தரங்கு 15.11.2017 ஆம் நாளில் முனைவர். டி.பி. கணேசன் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்தசர்வதேச அளவிலான கருத்தரங்கில் நகர வடிவமைப்பு நகரகட்டமைப்புக்களுக்கான வடிவமைப்பு மற்றும் நிர்வகிப்பு சுற்றுச் சுழல் பராமரிப்புக்கான திட்டங்கள் மற்றும் அதிநவீன இல்லம் என்கின்ற நான்கு முக்கிய நோக்குகளை மையமாகக் கொண்டு ஆய்வு உரைகள் நிகழும். இவற்றோடு “நகர வடிவமைப்பு மற்றும் நிர்வகிப்பு வெகுவான நகரமேம்பாடு மற்றும் அணுகுமுறைகள் நகரத்தின் நீர் நிலைநிர்வாகம் நகரத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் நிர்வகிப்பு அதிநவீன போக்குவரத்துத் திட்டங்கள் மற்றும் பொதுமக்களும் தனியார் நிறுவனங்களும் இணைந்தாற்றும் நகரமேலாண்மை பசுமை இல்லம் அதிநவீன இல்லம் மற்றும் பொதுமக்களுக்கான போக்குவரத்து திட்டங்களுக்கு ”புவியியல் தகவல் முறைமை மற்றும் நிர்வகிப்பு உலகளாவிய இடவாக்கமைப்புக்கான தொலைதூர தொழில் நுட்பத்தின் வழி பெறப்படும் புள்ளிவிவரங்களின் பயன்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் நிகழும்.

ஆப்கானிஸ்தான், போட்ஸ்வான்க்ய, எகிப்து, ஈராக், கென்யா, மொரீஷியஸ், சூடான், தான்சானியா, வியட்நாம், ஜிம்பாபாவே, நமிபியா போன்ற நாடுகளிலிருந்து‘நகர வடிவமைப்புத் துறை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். இந்திய நாட்டிலுள்ள இந்திய தொழில்நுட்பக்கழகம் –பாலக்காடு மைசூர் பல்கலைக்கழகம் ஆந்திரா பல்கலைக்கழகத்திலிருந்தும்; இக்கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.

இக்கருத்தரங்கிற்கு சென்னை தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தேசிய கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் சுசீந்திரநாத் பாண்டா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பிக்கின்றார்.

“அதிநவீன நகர அமைப்பு நகர வடிவமைப்பு மற்றும் நிர்வகிப்பு நகர கழிவுநீர் நிர்வகிப்பு தேசிய மற்றும் உலகஅளவிலான பசுமை கட்டடம்” குறித்து ஆய்வுகள் நிகழ்த்தவும்”தொழில் நுட்பவல்லுனர்கள் ஆராய்ச்சியாளர்கள் பயனாளிகள் அரசு சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர்களை இணையச் செய்திடவும்” இக்கருத்தரங்க மேடை உதவிடும்.

பொதுவான திட்டவடிவமைப்புகள் கழிவுநீர் மற்றும் திடக்கழிவு நிர்வகிப்பிலுள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் “ஸ்வட்ச் பாரத” திட்டத்தின் நோக்கத்தை அடைவதற்கும் இக்கருத்தரங்குமிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

SRM University Organizing a International Seminar on Sustainable Development and Environment Management

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/SRM-15-11-17]