எஸ். ஆர். எம் பல்கலைக்கழகம்: தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தின

எஸ். ஆர். எம் பல்கலைக்கழகம்: தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தின
SRM University National Cancer Awareness Day 2017

எஸ். ஆர். எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், எஸ். ஆர். எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள நோய்குறியியல் துறையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நவம்பர் ஒன்றாம் தேதியும் இரண்டாம் தேதியும் கொண்டாடப்பட்டது.

நவம்பர் 1-ம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 450 க்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் சார்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நவம்பர் 2-ம் தேதி இந்த விழாவினை எஸ். ஆர். எம் பல்கலைகழக வேந்தர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்கள். எஸ். ஆர். எம் மருத்துவக் கல்லூரி மற்றும் இதர எஸ். ஆர். எம் மருத்துவமனைகளில் உயர்தர புற்றுநோய் நவீனசிகிச்சை, அனுபவம் வாய்ந்த மருத்துவக்குழுவினரால் எஸ். ஆர். எம். உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகளுடன் அளிக்கப்பட்டு வருகின்றது.

நோய்க்குறியியல் பாடத்தில் வல்லமையுடன் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு திருமதி. இராமாமிர்தம் சுழற்கோப்பை மாண்புமிகு வேந்தர் அவர்களால் வழங்கப்பட்டது. இத்துடன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் மரு. என். சந்திரபிரபா, இயக்குநர் (மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகள்) தற்போது இந்தியாவில் பெருகிவரும் புற்றுநோய் கருத்துக்களை விவரித்தார். குறிப்பாக இந்தியாவில் மக்கள் பல்வகையான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ். ஆர். எம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனனயில் பலவிதமான புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க வேண்டும் என்பதை வளியுறுத்தினார். எஸ். ஆர். எம் மருத்துவக்கலூரி முதல்வர் மரு. அ. சுந்தரம் அவர்கள் சிறப்புரையாற்றினார். அமைப்பு செயலாளர் மற்றும் நோய்க்குறியியல் துறைத் தலைவர் மரு. க . சிவசேகர் அவர்கள் விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்றார். அடையார் புற்றுநோய் நிலைய சிறப்பு புற்றுநோய் நிபுணர் மரு. வெங்கட்ராமன் இராதாகிருஷ்ணன், அரசு ஓமந்தூர் மருத்துவக்கல்லூரி நோய்க்குறியியல் துறைத் தலைவர் மரு. சந்திரமௌலீஸ்வரி மற்றும் எஸ். ஆர். எம் மத்துவக்கல்லூரி கதிர்வீச்சு துறைத்தலைவர் மரு. புலாபாய் கற்பகம் ஆகியோர் சிறப்புரையாற்றி புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் நவீன முறைகளை பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.

SRM University National Cancer Awareness Day 2017

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/SRM-02-11-17]