SRM: எம்.எம்.ஏ மாணவர் அத்தியாயத் துவக்கவிழா

SRM: எம்.எம்.ஏ மாணவர் அத்தியாயத் துவக்கவிழா
SRM University Inaugration of Madras Management Association Students Chapter

எம்.எம்.ஏ மாணவர் அத்தியாயத் துவக்கவிழா (Inauguration of Madras Management Association Students’ Chapter)

மேலாண்மையியல் மாணவர்கள் கற்றலுக்கு அப்பாலும் செயலாற்றுதலில் ஈடுபடுதல் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், எம்.எம்.ஏ மாணவர் அத்தியாயத் துவக்கவிழா எஸ்.ஆர்.எம் மேலாண்மையியல் புல கருத்தரங்கு மையத்தில் 2017 நவம்பர் நடைப்பெற்றது.

மேலாண்மையியல் புலத் தலைவர் முனைவர் வி.எம். பொன்னையா அவர்கள் வரவேற்புரையாற்றினார். இணைதுணைவேந்தர் முனைவர் தி.பொ.கணேசன் அவர்கள் பலதரப்பட்ட தொழில் நிறுவன அமைப்புகளின் அனுபவங்களையும் தொழில் திறமைகளையும் மாணவர்களுக்கு போதிப்பதில் முதலிடம் வகிக்கும் எஸ்.ஆர்.எம் மேலாண்மையியல் புலத்திற்கு பத்திரிக்கை அமைப்புகள் தரவரிசையில் சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளதை பாராட்டிப் பேசினார்.

இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் 147 நிறுவனங்களுடன் உடன்படிக்கை உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

எம்.எம்.ஏ பொது மேலாளர் முனைவர் ஆர். வெங்கட்ராமன் கற்றலுக்கும் செயலாற்றுதலுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி சிந்தனையைத் தூண்டும் விதத்தில் விளக்கினார்.

சிறப்பு விருந்தினர் எஸ்.சீதாராமன் முதன்மைச் செயல் அலுவலர், Super Auto Forge Ltd அவர்கள் மாணவர்கள் எதிர்நோக்கத் தக்க வருங்கால வாய்ப்புகளைக் குறிப்பிட்டார். நிறுவனர் வேந்தர் முனைவர் டி.ஆர். பாரிவேந்தர் அவர்கள் மாணவர்களின் தனித்துவ முக்கியத்துவத்தையும் மேலாண்மை செயலாற்றுதலில் மாணவர்களின் ஈடுபாடு பற்றியும் உரையாற்றினார்.

மேலாண்மை புல முதலாம் ஆண்டு மாணவி அய்ஸ்வர்யா நன்றியுரை வழங்கினார்.

SRM University Inaugration of Madras Management Association Students Chapter

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/SRM-08-11-17]