SRM பல்கலைக்கழகத்தில் சேவைத் திருநாள்

SRM பல்கலைக்கழகத்தில் சேவைத் திருநாள்
SRM University Celebrated Service Day

SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் கீழ் இயங்கும் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் சார்பில் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் பிறந்தநாள், சேவைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டது. மறைமலை நகர் அரசு மேனிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் மற்றம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் 21.8.2018 அன்று நடைபெற்றன. 22.8.2018 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தானம் மற்றும் கண்தான முகாம்கள் நடைபெற்றன.

24.8.2018 அன்று நடைபெற்ற விழாவிற்குப் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் நா. சேதுராமன் தலைமை தாங்கினார். துணை வேந்தர் சந்தீப் சஞ்செட்டி அவர்கள் முன்னிலை வகித்தார் வி.ஜி.பி. நிறுவனர் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களை வாழ்த்துரை வழங்கினார். சென்னைப் பெருநகர முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கூடுவாஞ்சேரி IGM குழந்தைகள் காப்பக மாணவ, மாணவியருக்குக் கல்வி உபகரணங்களையும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற்றதற்கான சான்றிதழ்களையும் வழங்கி டாக்டர் பாரிவேந்தர் விழாப் பேருரை ஆற்றினார். முன்னதாக மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துத் துறை இயக்குநர்கள், புலத் தலைவர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.

SRM University Celebrated Service Day