எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் விருதுகள் 2018

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் விருதுகள் 2018

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, இதழியல், பண்பாட்டு வளர்ச்சிக்காகப் பல்வேறு அரிய பணிகளைச் செயலாற்றிவருகிறது. ஐந்தாம் தமிழ்ச்சங்கமாகச் செயல்பட்டு வரும் தமிழ்ப்பேராயம் தனது பல்வேறு செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கதாக முன்னெடுத்து வருவது தமிழ்ப்பேராய விருதுகள். 

2012 ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக 2 கோடி ரூபாய்க்கும் மேலாக விருதுத்தொகை தமிழ்ப்பேராய விருதுகளுக்காக வழங்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 7வது ஆண்டாக, 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகளை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவனவேந்தர் தமிழ்ப்பேராயத்தின் புரவலர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் அறிவித்தார். அந்த அறிவிப்பில் இந்த ஆண்டு 10 வகைப்பாட்டில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 15 லட்சம் பெறுமானமுள்ள தொகை விருதுகளுக்காக வழங்கப்படவுள்ளன என்று குறிப்பிட்டார்.

தமிழ்ப்பேராயம் கவிதை, சிறுகதை – நாவல் – நாடகம், தமிழிசை, ஓவியம், சிற்பம், குழந்தை இலக்கியம், அறிவியல் தமிழ், தமிழியல் ஆய்வு, தமிழ் இதழ், தமிழ்ச்சங்கம், சிறந்த கலைக்குழு, வாழ்நாள் சாதனையாளர் எனத் தமிழின் பல்துறைப்பட்ட வகைப்பாடுகளிலும் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இவ்விருதினை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளது..

இதற்கு முன்பாகத் தமிழ்ப்பேராயத்தில் விருதுகள் பெற்ற பலரும் தொடர்ந்து சாகித்திய அகாதமி விருது (திரு. பூமணி – அஞ்ஞாடி, திரு வண்ணதாசன் – ஒரு சிறு இசை) செம்மொழி நிறுவனத்தின் வழியாகக் குடியரசுத்தலைவர் விருதுகள் ( மூதறிஞர் தமிழண்ணல், முனைவர் செ. வை. சண்முகம், முனைவர் ஆ. தட்சிணாமூர்த்தி) உள்ளிட்ட விருதுகளைத் பெற்றுவந்திருப்பது தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் தேர்வு முறையினைத் தனித்து அடையாளப்படுத்துகிறது.

இந்தவிருது அறிவிப்பின் போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் இணைத்துணை வேந்தரும் தமிழ்ப்பேராயத்தின் தலைவருமான முனைவர் இர.பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழகத்தின் நிதி மேலாண்மை இயக்குநர் திரு. மு. பாலசுப்பிரமணியன்,  பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர்நா. சேதுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

தேர்வுக்குழு நடுவர்கள்
1. மாண்பமை நீதியரசர்முனைவர் பி. தேவதாஸ்
2. முனைவர் ம. இராசேந்திரன்
3. முனைவர் பா.ரா. சுப்பிரமணியன்
4. கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி
5. முனைவர் இரா. சீனிவாசன்

தமிழ்ப்பேராய விருதுகள் - 2018

விருதாளர்களின் பட்டியல் - 2018

 

1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது (ரூ. 1,50,000)

நூல்பெயர் - நீவாநதி                 

ஆசிரியர்பெயர்  -கவிப்பித்தன்

 

2.    பாரதியார் கவிதை விருது (ரூ. 1,50,000)                                                    

நூல்பெயர் - இணைவெளி                  

ஆசிரியர்பெயர் – மரபின்மைந்தன்முத்தையா

 

3. அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது(ரூ. 1,50,000)

நூல்பெயர் –மந்திர மரமும் மாய உலகங்களும்      

ஆசிரியர்பெயர் – இரா. கற்பகம்

 

4. பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது / ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்தொழில் நுட்ப விருது (ரூ. 1,50,000)

நூல்பெயர் - இணையக்குற்றங்களும் இணையவெளிச்சட்டங்களும்

ஆசிரியர்பெயர் -  சந்திரிகாசுப்பிரமணியன்

 

5. ஆனந்தகுமாரசாமிகவின் கலை விருது  /

முத்துத்தாண்டவர் தமிழிசை விருது(ரூ. 1,50,000)

நூல்பெயர்  - கம்பனில்இசைத்தமிழ்                         

ஆசிரியர்பெயர் – அரிமளம்சு. பத்மநாபன்

 

6.    பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது (ரூ. 1,50,000)

      நூல்பெயர்  - விளிம்புநிலைமக்கள்வழக்காறுகள்             

    ஆசிரியர்பெயர் – ஆ. தனஞ்செயன்

 

7.    சுதேசமித்திரன்தமிழ்இதழ்விருது(ரூ. 1,00,000)

      இதழின்பெயர்   - காக்கைச்சிறகினிலே                

     ஆசிரியர்பெயர் – வி. முத்தையா

 

8.    தொல்காப்பியர்தமிழ்ச்சங்கவிருது(ரூ. 1,00,000)

       சங்கத்தின்பெயர் - தமிழ்க்கல்விச்சேவை - சுவிட்சர்லாந்து

       பொறுப்பாளர் பெயர் – கந்தசாமி பார்த்திபன்

 

9.  அருணாசலக்கவிராயர்விருது (தமிழிசைக்குழு  /நாட்டுப்புறக்கலைக்குழு) (ரூ. 1,00,000)

குழுவின்பெயர் – களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்

பொறுப்பாளர் பெயர் - ஹரிகிருஷ்ணன்

 

10.   பாரிவேந்தர் பைந்தமிழ் விருது (ரூ. 3,00,000)

தமிழறிஞரின் பெயர் –பேராசிரியர் முனைவர். இ. சுந்தரமூர்த்தி

முதல் ஆறு விருதுகளில் ஒவ்வொரு விருதுக்குமான பரிசுத்தொகை ரூ.1,50,000/-. இந்தப் பரிசுத்தொகையில் ரூ. 1,25,000/- நூலாசிரியருக்கும், ரூ. 25,000/- நூலினை வெளியிட்ட பதிப்பாளருக்கும் பகிர்ந்து வழங்கப்படும்.