பனேசியா – 2018

பனேசியா – 2018
SRM Medical College Hospital celebrates PANACEA 2018

பனேசியா – 2018 தேசிய அளவிலான கலைத்திருவிழா

SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒப்பற்ற உயர்தரமான கல்வி சேவையிலும் மருத்துவ சேவையிலும் சிறந்த பணிகளை செய்து வருகிறது.

அந்நிறுவனம் பத்தாவது ஆண்டாக பனேசியா - 2018 என்ற தேசிய அளவிலான கலைத்திருவிழாவை ஏப்ரல் 27 & 28 ஆகிய நாட்களில் கொண்டாடியது .மருத்துவக் கல்லூரிகளுக்கிடையே பனேசியா கலைத்திருவிழா மிக பிரபலமானதாகவும் மருத்துவ மாணவர்களின் பல்வேறு தனித்திறன்களை ஊக்குவிக்கும் ஒரு தளமாக உள்ளது.

இந்நிகழ்ச்சியை பிரபல திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தொடங்கி வைத்தார். SRM நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் சந்தீப் சன்சைடி தலைமைத் தாங்க மருத்துவக்கல்லூரி இயக்குநர், புலத்தலைவர், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த வருட பனேசியாவில் இந்திய நடனங்கள், புதையல் வேட்டை, திரைப்பட இரவுகள், பாடல் நிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையிடல், பானை ஒவியம் போன்ற சுவாரசியமான பல்வேறு நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.

இந்தியா முழுவதிலும் உள்ள பிற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில் தினமும் கற்றுக்கொள்வது ஓர் அனுபவம் அதுபோல் புதிய அனுபவங்களை கற்றுக்கொள்ளாவிட்டால் வாழ்க்கையை பயனிலை என்றார். பனேசியாவின் நிறைவு விழாவிலும் பல்வேறு சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் நடைப்பெற்று நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

SRM Medical College Hospital celebrates PANACEA 2018

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/PANACEA-28-04-18]