NCMEC’18 தேசிய அளவிலான மாநாடு- 2018

NCMEC’18 தேசிய அளவிலான மாநாடு- 2018
SRM Institute of Science and Technology conducted NCMEC 18

மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையின் NCMEC’18 என்னும் தேசிய அளவிலான மாநாடு- 2018

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் NCMEC’18 என்னும் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. இது நுண்மின்னணுவியல் உட்பொதிந்த அமைப்பு மற்றும் தகவல் தொடர்புக்கான கலந்தாய்வு அமர்வுகள், சிறப்புரைகள் அடங்கிய தேசிய மாநாடு ஆகும். இம்மாநாடு ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை பகிர்ந்து கொள்ள ஒரு பொதுவான தளமாக அமைந்தது. இம் மாநாட்டின் கலந்துரையாடல்கள் மூலம் மாணவர்கள் பல தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வுகாண இயலும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்ப கருவிகளும் நம் நாட்டின் அடிப்படை முன்னேற்றத்திற்கான வன் மற்றும் மென் பொருள் உற்பத்தியும் இத்தலைமுறையின் ஆசிரியர் மாணவர் ஆராய்ச்சி திறனை சார்ந்தே இருக்கின்றது. அவ்வகையில் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழும்.

NCMEC’18 தலைமை விருந்தினராக பேராசிரியர். பன்ஸீதர் மாஜி, தலைவர், IIITDM,காஞ்சிபுரம் அவர்கள் தலைமையேற்று மாநாட்டின் விழா மலரை வெளியிட்டார். இதை தொடர்ந்து டாக்டர். அஷோக் சந்திரா, இந்திய அரசின் முன்னாள் தொழில்நுட்ப ஆலோசகர், சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இம்மாநாட்டில் IIT, IIITDM, CSIR போன்ற பல தலைசிறந்த தொழில்நுட்ப பயிலகங்களில் இருந்து பல்வேறு வல்லுநர்கள் சிறப்புரையாற்றினர்.

இம் மாநாட்டில் டாக்டர். சி. முத்தமிழ்செல்வன், இயக்குனர், (பொறியியல் மற்றும் தொழில்நுட்பப்பிரிவு) தலைமையேற்று சிறப்புரையாற்றினார். டாக்டர். டி. ராமாராவ், (துறை தலைவர், மின்னணு மற்றும் தொலை தொடர்பியல்) டாக்டர். பி. அருணா பிரியா, (ஒருங்கிணைப்பாளர் NCMEC’2018) பேராசிரியர்கள், ஆசிரியபெருமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு இம்மாநாட்டினை மேலும் சிறப்பித்தனர்.

23 மார்ச் 2018, அன்று பேராசிரியர். சௌராசியா, NIT,ராய்ப்பூர் அவர்கள் தலைமையில் “இயந்திர சிறப்பு கற்றல்” என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

SRM Institute of Science and Technology conducted NCMEC 18