SRM பல்கலைக்கழகத்தின் உலக சுற்றுலா தினம் 2017

SRM பல்கலைக்கழகத்தின் உலக சுற்றுலா தினம் 2017

பெருமைமிகு SRM பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக 1993ல் தொடங்கப்பட்டது SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம். இத்துறையில்  நம் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனமாக திகழ்ந்து மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழலையும் உள்ளார்ந்த கற்பித்தலையும் எப்பொழுதும் வழங்குகிறது. மேலும், இந்நிறுவனம்  திறன்களை நன்கு வளர்த்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதில் சிறப்பாக வளர்ந்தோங்கிப் புகழுடன் விளங்குகிறது.

SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் சென்னை, திருச்சி, சிக்கிம், தில்லி ஆகிய இடங்களில் இயங்குகிறது. நல்ல உள்கட்டமைப்புகள், புதுமைக் கருவிகள், திறனுறு வகுப்பறைகள், புதுவகை ஆய்வகங்கள், மேம்படுத்தப்பட்ட நூலகம், நிறுவனத்துடன் இணைந்த நட்சத்திர உணவகம் ஆகியவை இந்நிறுவனத்தில் உள்ளன. மாணவர்கள் கைமேல் பயனாகப் பயிற்சிபெற்றுத் தங்கள் திறமையையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளப் பெரிதும் உறுதுணையாக உள்ளது. இந்தியாவில் HLACTயின் சிறப்புச் சான்றளிப்பைப் பெற்ற ஒரே தனியார் உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில்  SRM IHM  மட்டும் என்பதைப் பெருமையுடன் தெரிவிக்க விரும்புகிறோம்.

சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை கற்பிக்கும் வகையில் நம்  SRM IHM கல்வி நிறுவனத்தின் மூலம் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில்  SWACHHTA HI SEWA எனும் தலைப்பில் பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது. செப்டம்பர் 18 முதல்  23ஆம் தேதி வரை  நம் கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்த ஊக்குவிக்கப்பட்டனர். இதன் விளைவாக மாணவர்கள் 19ஆம் தேதி அன்று அரசு மேல்நிலை பள்ளியை தூய்மைப்படுத்தினர்  மற்றும்  20ஆம் தேதியில் SRM பல்கலைக்கழக வளாகத்தை மாணவர்கள் தூய்மை ப்படுத்தினர் . இதை தொடர்ந்து 21ஆம் தேதி வியாழன் அன்று மாணவர்கள் பொத்தேரியில் உள்ள ஏரியை தூய்மைப்படுத்தினர் இச்செயல் நமது சுற்று சூழலை மேன்மேலும் அழகாகியது.

கடந்த 18.09.2017 அன்று சுமார் 100 மாணவர்களுடன் ஆசிரியர்களும் இனைந்து இரத்தினமங்கலத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் சுற்றுப்புறத்தை தூய்மை படுத்த  தூய்மை இந்தியாஎன்னும்  திட்டத்தின் கீழ் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 22ஆம்  தேதி மாமல்லபுரத்தில் உள்ள புலிக்குகை பகுதியை ஏறக்குறைய 200