எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம் 1.07 கோடி நிதியுதவி

எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம் 1.07 கோடி நிதியுதவி
SRM Contribute huge amount to Kerala Flood relief

கேரள மாநிலம் பெரும் மழையாலும் வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம் 1.07 கோடிக்கான காசோலையை கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் சேர்ப்பித்துள்ளது.

”கேரளா மாநிலத்திலத்திற்கும் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம். இந்த எதிர்பாரா மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் நஷ்டத்தினையும் பாதிப்பையும், நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்தும் உறுதுணையாக இருந்தும் ஈடுசெய்ய வேண்டும். அனைவரும் தம்மால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்து இந்த பெரும் பாதிப்பிலிருந்து கேரளா மக்கள் விடுபட துணைநிற்க வேண்டுகிறேன்” என்று எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் தலைவர் முனைவர் ஆர்.பி. சத்தியநாராயணன் அவர்களும், துணைத்தலைவர் டாக்டர் எஸ். சிவக்குமார் அவர்களும் உடன் இருந்தனர்.

SRM Contribute huge amount to Kerala Flood relief