எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்டாங்குளத்தூர் - 603 203 பணி நியமன ஆணை வழங்கும் விழா

எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்டாங்குளத்தூர் - 603 203 பணி நியமன ஆணை வழங்கும் விழா
எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்டாங்குளத்தூர் - 603 203 பணி நியமன ஆணை வழங்கும் விழா

எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
காட்டாங்குளத்தூர் - 603 203
பணி நியமன ஆணை வழங்கும் விழா

நாள்: 11.06.2022

    காட்டாங்குளத்தூரில் இயங்கிவரும் புகழ்பெற்ற எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11.06.2022, சனிக்கிழமை அன்று பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

    கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் நடத்தி சுமார் 540 பணி நியமன ஆணைகள் பெறப்பட்டன.  இதில் 77 பன்னாட்டு மற்றும் இந்திய நிறுவனங்கள் பங்குபெற்றன.

    கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. வாசுதேவராஜ் தலைமையுரையாற்றினார். இந்த நிகழ்விற்கு கல்லூரியின் துணை முதல்வர் 
திரு. கா. மதியழகன் வரவேற்புரையாற்றினார்.

    கல்லூரியின் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி திரு. ச. சந்தானகிருஷ்ணன் அறிக்கையினை வாசித்தளித்தார்.

    எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் 
முனைவர் சு. பொன்னுசாமி அவர்கள் பணி நியமன ஆணை பெற்றவர்களை வாழ்த்தினார்.

    இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் TCSன் மனிதவள மேம்பாட்டுத்துறைத் தலைவர் திரு. M.P. லஷ்மண் பிரகாஷ் அவர்கள் பங்கேற்று மாணவ/மாணவிகளுக்கு பணிநியமன ஆணை வழங்கி, நிறுவனங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றி கூறி மாணவ/மாணவிகளை வாழ்த்தினார்.

    கல்லூரியின் மின்னணுவியல் அறிவியல் துறைத்தலைவர் திரு. பா. ஹார்ஸ்லி சாலமன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.