SRM - AARAMBH '19

SRM - AARAMBH '19

வடபழனியில் உள்ள SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன ECE துறை ஒவ்வொரு வருடமும் AARAMBH என்கின்ற தேசிய அளவிலான இளம் தொழில்முனைவோர்க்கான கருத்தரங்கை நடத்துகிறது. 

இந்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரு. துரை தோட்லா , நிறுவனர் - டெக்னாலஜி ஸ்டாஜஜீஸ் சென்னை, மற்றும் மரியாதை விருந்தினராக முனைவர் ந. சுரேஷ் குமார் - நிறுவனர் - 360 டிகிரி அகாடமி வருகை தந்திருந்தனர். முனைவர்.சி.கோமதி, துறைத்தலைவர்,ECE,SRMISTஅவர்கள் வரவேற்புரையை வழங்கினார். பின்பு முனைவர்.அ.ஷர்லி எட்வர்டு, உதவி பேராசிரியர், அவர்கள் AARAMBH'19, மாநாட்டைப்பற்றி விளக்கினார். அதன் பிறகு முனைவர்.க.துரைவேலு, Dean(E&T),SRMIST, வடபழனி அவர்கள் விருந்தினர்களுக்குப் பூச்செண்டு வழங்கி மரியாதை செலுத்தினர். பின்பு அவர் AARAMBH '19 மாநாட்டைப்பற்றியும் SRM மாணவர்களின் பற்றியும் பெருமிதமாகக் கூறினார்.அதைத் தொடர்ந்து  சிறப்பு விருந்தினர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவருடைய பேச்சு மாணவர்களிடத்தில் உற்சாகத்தையும் தூண்டுதலையும் உருவாக்கியது. மேலும் இவ்விழாவில் இளம் தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் வட்ட மேசை மாநாடு நடந்தது. இதில் திரு. ஈஷ்வர் சபாபதி, திரு. முத்துக்குமார் - ராக்கி டடெண்டல் லேப், திரு. லஷ்மி ஷங்கர் - டாப் ரீச் சொலுஷன்ஸ், திரு. அவிரா தாரகன் போன்ற பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், நிறுவனத்தலைவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் அவர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உள்ள ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தொழில் வாய்ப்புகளை பற்றி மிகத்தெளிவாக உரை நிகழ்த்தினார். இம்மாநாட்டில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த B plan என்ற போட்டி நடத்தப்பபட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இறுதியாக டி.வைஷாலி,உதவி பேராசிரியர் அவர்கள் நன்றி உரையை வழங்கி விழாவை நிறைவு செய்தார். -- A Dinesh Babu, Assistant Professor (O.G), Department of Electronics & Communication Engineering, SRM Institute of Science and Technology, Vadapalani, Chennai - 600 026. Mobile No: +91 9840067763 Alternate Mail id: dbanbumani@gmail.com