எஸ்.ஆர்.எம்: 60வது மண்டல நாசா மாநாடு

எஸ்.ஆர்.எம்: 60வது மண்டல நாசா மாநாடு
SRM 60th Zonal Nasa Convention

சென்னை, செப்டம்பர் 29, 2017: எஸ்ஆர்எம் ஸ்கூல் ஆஃப் என்விரான்மென்டல் ஆர்க்கிடெக்சர் அன்ட் டிசைனில் (எஸ்.இ.ஏ.டி) இன்று மூன்று நாட்கள் நடைபெறும் வருடாந்திர மண்டலம் 6- நாசா மாநாட்டு ( “EPOCH 17”) தொடங்கியது. இந்த மாநாடானது இளம் கட்டிடக்கலை மாணவர்களுக்கு அறிவுசார் பரிமாற்றத்துக்கும், புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும். இந்த ஆண்டுக்கான வருடாந்திர மாநாட்டை எஸ்ஆர்எம் எஸ்.இ.ஏ.டி நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருப்பது மிகவும் மரியாதைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டைச் சென்னை டி.நகர் துணை போலீஸ் கமிஷனர் திரு எம்.அரவிந்தன் ஐ.பி.எஸ் அவர்கள் தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் 2000-க்கும் அதிகமான கட்டிடகலையியல் படிக்கும் மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். 

கட்டிடக்கலையியல் துறையில் நடந்துள்ள மாற்றங்கள், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என அனைத்தையும் மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் கட்டிடக்கலையியல் துறையில் தங்கள் அறிவு, சிறந்த செயல்பாடு, ஆராய்ச்சி, புதுமைகள், கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள  உள்ளனர். 

மிக முக்கியமாக மாணவர்களும், வல்லுநர்களும் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு இந்த மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிக முக்கிய விஷயமாகும். இதுதவிர, செராமிக் மாடலிங், 3டி பிரிண்டிங், கிரிஹா, டிஜிட்டல் இன்டியூஷன், போர்ட்ஃபோலியோ மேக்கிங், பேரியர் ஃப்ரீ வொர்க்‌ஷாப், சினிமோட்டோகிராஃபி மற்றும் உயரமான கட்டிடங்கள் வடிவமைப்பு எனப் பல்வேறு விஷயங்கள் பற்றிய பயிற்சி பட்டறைகளும் நடத்தப்படுகின்றன. இதற்கு, மாணவர்களின் ஒட்டுமொத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மாநாட்டில் 44க்கும் மேற்பட்ட ஸ்பாட் ஈவென்ட்ஸ் மற்றும் 6 சிறு கருத்தரங்கங்கள்  நடத்தப்பட்டன. 

மாநாட்டைத் தொடங்கிவைத்துச் சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனர் திரு எம்.அரவிந்தன் அவர்கள் பேசுகையில், "இந்த மாநாட்டில் பங்கேற்றிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாம் கற்றுக்கொள்ளும், அறிந்துகொள்ளும் ஞானம், கல்வி உள்ளிட்டவை நல்ல விஷயத்துக்காகப் பயன்படும்போது தான் அது உபயோகமானதாக இருக்கிறது. நம்முடைய சகாக்களிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது கற்றலில் மிகச்சிறந்த வழிகளுள் ஒன்று" என்றார். 

இரண்டாம் நாள் நிகழ்வில் ரூபன்ஸ் டிராஃபி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், வரைகலை உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதை, ஐந்து பேர் கொண்ட நடுவர் குழு ஆய்வு செய்து தேர்வு செய்வர். இவர்கள் மொத்தம் எட்டு சிறந்தவற்றைத் தேர்வு செய்வர். இதில், மிகச்சிறந்த ஒன்றுக்கு விருது அளிக்கப்படும். இதுதவிர, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கலைத்திறன் மற்றும் திறமைகளை வெளிப்படுத்த உதவும். மூன்றாவது நாள், பயிற்சி பட்டறை நடத்தப்படும். 

ஒட்டு மொத்தத்தில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கட்டிடக்கலையில் முன்னேற்றங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டு, தெரிந்துகொண்டு மனித வாழ்வின் தரத்தை உயர்த்துவதே நோக்கமாக இருக்கிறது. 

தொடக்க விழாவில், ராமாபுரம் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக டீன், இ அன்ட் டி டாக்டர் சுப்பையா பாரதி, எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக எஸ்.இ.ஏ.டி துணைத் தலைவர் (அட்மின்) ஏஆர் லோகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SRM 60th Zonal Nasa Convention

 

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/SRM 30-09-17]