எஸ்.ஆர்.எம் கல்லூரி 21 ஆவது பட்டமளிப்பு விழா

எஸ்.ஆர்.எம் கல்லூரி 21 ஆவது பட்டமளிப்பு விழா
SRM 21st Graduation Day 2018

எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 21 ஆவது பட்டமளிப்பு விழா

03-02-2018: புகழ்பெற்ற எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் அங்கமான எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21 ஆவது பட்டமேற்பு விழா பிப்ரவரி 3 ஆம் நாள் காலை 11.30 மணிக்குக் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள டி.பி. கணேசன் கலையரங்கில் நடைபெறறது.

இக்கல்லூரி தலைசிறந்த கல்வியாளர் முனைவர் T.R.பாரிவேந்தர் அவர்களால் 1993 -94 ஆம் கல்வியாண்டில் சென்னைப்பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் துவங்கப்பட்டது. தற்பொழுது 2502 மாணவர்களைக் கொண்டு 19 துறைகளில் 119 பேராசிரியர்களுடன் இயங்கி வருகிறது.

முதுநிலை கணினித் தொழில்நுட்பத்துறையைச் (M.Sc CST)) சார்ந்த செல்வி ஜீவிதா என்ற மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் இக்கல்வியாண்டில் 91 மாணவர்களுக்கு கட்டணச் சலுகையும், 57 மாணவர்களுக்கு முழுக்கட்டணச் சலுகையும் வழங்கியது பெருமைக்குரியது.

விளையாட்டு மற்றும் தேகக்கட்டு திறனில் வணிகவியல் மேலாண்மைத்துறையைச் சேர்ந்த T. நரேந்திரன் சென்னைப்பல்கலைக்கழக அளவில் மிகச்சிறந்த தேகக்கட்டு உடையவன் என்ற விருதினைப் பெற்றுள்ளான். இந்தியப் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற சித்திரப் பிரதிமை போட்டியில் கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த R. கோகுல்ராஜ் மகாத்மா காந்தி உருவப் படத்தை உருவாக்கிச் சாதனைப் படைத்துள்ளான்.

இவ்விழாவிற்கு தமிழக அரசு உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் உயர்திரு சுனீல் பாலீவால் இ.ஆ.ப. அவர்கள் விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமேற்பு விழாப் பேருரை வழங்கினார்.

எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் நிறுவனரும் எஸ்.ஆர்.எம் தொழில் நுட்ப நிறுவனத்தின் வேந்தருமாகிய முனைவர் T.R.பாரிவேந்தர் அவர்கள் தலைமையேற்று விழாவைச் சிறப்பித்தார்.

சென்னைப் பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் தேர்ச்சிப் பெற்றுள்ள 75 க்கும் மேற்பட்ட மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 457 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

சிறப்பு விருந்தினர் – திரு. சுனீல் பாலீவால் அவர்கள் இ.ஆ.ப முதன்மைச்செயலாளர், உயர்கல்வித்துறை – தமிழக அரசு.

தலைமை – திருமிகு. T.R.பாரிவேந்தர் அவர்கள், நிறுவனர் எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம்.

முன்னிலை – முனைவர் கே. சுப்புராம் முதல்வர் எஸ்.ஆர்.எம் கலை அறிவியல் கல்லூரி.

SRM 21st Graduation Day 2018