ஊரக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்ட 105 இடங்களுக்கான தேர்தல்
இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணைய அறிவிப்பு:
“ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த கடந்த ஜன.11 அன்றும், கடந்த ஜன.22 அன்றும் நடைபெற்ற சாதாரண மறைமுகத் தேர்தலின்போது பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மார்ச் 4-ல் நடத்திட மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
அதன்படி கீழ்க்கண்ட இடங்களில் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர் 1 பதவியிடம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஒரு பதவியிடம், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் 11 பதவியிடங்கள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் 18 பதவியிடங்கள், கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவி 70 பதவியிடங்கள் என மொத்தம் 102 இடங்கள்.
மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 4 முற்பகல் 10 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மார்ச் 4 பிற்பகல் 3 மணிக்கும் நடைபெறும்.
இதில் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்களிப்பார்கள்''.
இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.