மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
Rs 10 thousand fine for drunk and drive

புதுடெல்லி: அபராதங்கள் உயர்த்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி சாலை விதிகளை மீறினால் ரூபாய் 500 அபராதமும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் 5 ஆயிரமும், அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 2 ஆயிரமும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாயும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் இந்த சட்ட திருத்த மசோதா வழிவகை செய்கிறது.

மேலும், அபராதங்கள் மட்டுமின்றி விபத்து தொடர்பான காப்பீட்டு தொகைகளும் இச்சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

விபத்தில் பலியானோருக்கு ரூபாய் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும், விபத்தில் காயமடைவோருக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்கப்படும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கவும் இச்சட்டத்தின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இச்சட்டத்தின்படி ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு ஆகியவற்றிற்கு ஆதார் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Rs 10 thousand fine for drunk and drive