ஜியோஃபோன் முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது

ஜியோஃபோன் முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது

50 கோடி ஃபீச்சர்ஃபோன் பயனாளிகளுக்கு டிஜிட்டல் வாழ்க்கையை வழங்குவதற்கான குறிக்கோளோடு அதிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிற ஜியோஃபோனின் முன்பதிவுகள் 2017 ஆகஸ்ட் 24ம் தேதி மாலை 5 மணியிலிருந்து தொடங்குகின்றன.

2017 ஜுலை 21ம் தேதியன்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொது சபை கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புரட்சிகரமான மொபைல் சாதனம், பூஜ்ஜியம் என்ற செயல்பாட்டு நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. அதாவது, இலவசமாகவே கிடைக்கப்பெறுகிறது. ஒவ்வொரு ஜியோஃபோனுக்கும் முற்றிலும் திரும்ப பெறக்கூடிய, ஒரே ஒருமுறை செலுத்துகிற பாதுகாப்பு டெபாசிட் தொகையான ரூ.1500-ஐ மட்டும் வாடிக்கையாளர்கள் செலுத்தினால் போதும். தவறாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை தவிர்ப்பதற்காகவே இந்த டெபாசிட் தொகை பெறப்படுகிறது. 2017 ஆகஸ்ட் 24ம் தேதியிலிருந்து தொடங்குகிற முன்பதிவு செய்கிற நபர்களுக்கு மட்டும் “முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த ஜியோஃபோன் வினியோகிக்கப்படும்.

மதிப்புமிக்க செயல்திட்டம்

முதலாவதாக, ஜியோஃபோனில் குரலொலி (வாய்ஸ்) அழைப்புகள் எப்போதும் இலவசமாகும்; கட்டணமில்லை.

இரண்டாவதாக, டிஜிட்டல் லைஃபை ஏதுவாக்குவதற்கு கட்டுபடியாகக்கூடிய கட்டணங்களில் டேட்டாவுக்கானஅணுகுவசதி அவர்களுக்கு அவசியமாகும். ஜியோஃபோன் மீது வரம்பற்ற டேட்டாவுக்கான அணுகுவசதியை ஜியோ அவர்களுக்கு வழங்கும்.

முன்றாவதாக, ஒரு மாதத்திற்கு ரூ.153 என்ற எளிய கட்டணத்தில் இலவச குரலொலி வசதி மற்றும் வரம்பற்ற டேட்டா வசதியை ஜியோ வழங்கும். தற்போது இத்துறையில் உள்ள தர நிலைகளில் 30ல் ஒரு பங்கு கட்டணம் மட்டுமே இது.

நான்காவதாக, அனைத்து மக்களுக்கும் பயன்படுத்த பொருத்தமானதாக இருப்பதற்கு இரு திட்டங்களை நாங்கள் அறிமுகம் செய்கிறோம். ரூ.53க்கு ஒரு வாராந்திர திட்டம்; மற்றும் ரூ.23க்கு 2 நாட்களுக்கான திட்டம். இந்த இரண்டுமே ஒரே மாதிரியான மதிப்பை வழங்கும்.

ஐந்தாவதாக, எஸ்எம்எஸ் செய்ய, பொழுதுபோக்கிற்கான ஜியோ செயலிகளின் தொகுப்பு ஏற்கனவே நிறுவப்பட்ட நிலையில் ஜியோஃபோன் கிடைக்கிறது. குறிப்பாக, பல பிராந்திய மொழிகளில் சமீபத்திய பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கான அணுகுவசதியை வழங்குகிற ஜியோ சினிமா மற்றும் ஜியோமியூசிக் ஆகியவற்றோடு 400-க்கும் அதிகமான நேரலை டிவி சேனல்கள் இடம்பெறுகிற ஜியோ டிவி வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. சிறப்பான சேவைகளை நுகர்வோர்கள் தொடர்ந்து அனுபவித்திடுவதை உறுதிசெய்ய மிகப் பிரபலமான உடனடி மெசேஜிங் மற்றும் சமூக வலையமைப்பு செயலிகள் சிலவும் இதில் உள்ளடங்கும்.

மொத்தத்தில் சுருக்கிக்கூறுவதென்றால், ஜியோஃபோன் என்ற பெயரில் புதிய பாதை படைக்கிற மற்றும் புரட்சிகரமான இச்சாதனம், ஜியோவின் பலத்த வரவேற்பு பெற்ற எளிய கட்டண திட்டங்களோடு சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 1.2 பில்லியன் குடிமக்களின் கைகளில் டிஜிட்டல் லைஃப்-ன் ஆற்றல் கிடைக்கப்பெறுவதை வகை செய்யும்.

எவ்வாறு முன்பதிவு செய்வது

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிமுறைகள் மூலமாகவும் ஜியோஃபோனை முன்பதிவு செய்யலாம். ஆஃப்லைன் வழிமுறையானது, ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ் வலையமைப்பு உட்பட ஜியோ ரீடெய்லர்கள் மற்றும் மல்டி-பிராண்டு மொபைல் ரீடெய்லர்களை உள்ளடக்கியதாகும். ஆன்லைன் சேனலானது, உலகில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்ஃப்கேர் செயலியான மைஜியோ மற்றும் இந்நிறுவனத்தின் சொந்த வலைதளமானஜியோ.காம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

முன்பதிவு தொகை

ரூ.500 என்ற முன்பதிவு தொகையை செலுத்துவதன் மூலம் முன்பதிவை செய்யலாம். இத்தொகையானது, மொபைல் சாதனம் டெலிவரி செய்யப்படும்போது, முற்றிலும் திரும்ப பெறத்தக்க, ஒரு நேரம் மட்டுமே செலுத்தப்படக்கூடிய பாதுகாப்பு டெபாசிட்டிற்கு எதிராக சரிக்கட்டப்படும். மொபைல் சாதன டெலிவரி நேரத்தின்போது, பாதுகாப்பு டெபாசிட்டில் எஞ்சிய தொகையான ரூ.1000-ஐ செலுத்த வேண்டும். ஒரு ஜியோஃபோன் பயனாளி, அதன் 36 மாதங்களுக்கு பயன்படுத்தலாம் மற்றும் பயன்படுத்திய ஜியோஃபோனை திரும்ப தருகின்ற நேர்வில் செலுத்திய செக்யூரிட்டி டெபாசிட் தொகையான ரூ.1500-ஐ முழுமையாக திரும்பப்பெறலாம்.

புரட்சிகரமான சாதனம்

புரட்சிகரமான சாதனமான ஜியோஃபோன் இந்தியர்களால் இந்தியாவுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. தங்களது ஆர்வத்தை நுகர்வோர்கள், ரீடெய்லர்கள் வழியாகவும் மற்றும் பல்வேறு ஜியோ செயல்தளங்களில் நேரடியாகவும் வெளிப்படுத்தியிருப்பது சந்தையில் இச்சாதனம் ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு அத்தாட்சியாக இருக்கிறது. வாழ்க்கையை பயனாளிகளுக்கு எளிதானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் ஆக்குகின்ற பல்வேறு தனிச்சிறப்பான அம்சங்களை இது கொண்ட