தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: மக்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: மக்களுக்கு எச்சரிக்கை

தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 7ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது, அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார். 

வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் மக்கள் அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.