இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி

இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி
Rajnikanth thanks Srilankan tamilians

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பாக கட்டப்பட்ட இலவச வீடுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்வதாக திட்டமிட்டு இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் இலங்கை செல்ல தமிழக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடித்து, ரஜினி தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், ரஜினியின் வருகை ரத்து ஆனதை தொடர்ந்து, இலங்கையில் உள்ள தமிழர்கள், ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்ல கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சிகளுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இது தொடர்பாக இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில் ரஜினி கூறியதாவது "நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும் போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Rajnikanth thanks Srilankan tamilians