தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்: வானிலை மையம்

தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்: வானிலை மையம்
Rain likely in Tamil Nadu Today Weather Center

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் உள்ள பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில், இன்றும் (வியாழக்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இது குறித்து அவர்கள் கூறியதாவது:

"தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஒரு வாரம் வரை மழை நீடிக்கும்.

இவ்வாறு வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Rain likely in Tamil Nadu Today Weather Center