மழை பெய்தும் ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை

மழை பெய்தும் ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை

சென்னையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் உள்ள தண்ணீர் உதவுகிறது, இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்டதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இதேபோன்று சோழவரம் ஏரியும் வறண்டு போகும் நிலையானது.

வடகிழக்கு பருவ மழையால் ஏரிகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்ந்திருந்தும், எதிர்பார்த்த அளவு தண்ணீர் ஏரிகளில் நிரம்பவில்லை, அதனால் கோடைக்கு தேவையான தண்ணீரை பெற மாற்று ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் அதிகாரிகள்.