பாரத் பந்த்: டெல்லி போராட்டத்தில் ராகுல், சோனியா

பாரத் பந்த்: டெல்லி போராட்டத்தில் ராகுல், சோனியா
Rahul Gandhi leads Oppositions Bharat Bandh

புது டெல்லி: பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது, விலை உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்களில் மறியல் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்செய் சிங் உள்பட இடதுசாரி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Rahul Gandhi leads Oppositions Bharat Bandh