’’விஸ்வாச தல’’

’’விஸ்வாச தல’’

புதுயுகம் தொலைக்காட்சியின் பொங்கல் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள்

’’விஸ்வாச தல’’

ரசிகன் தனக்கு பிடித்த நாயகன் பட வெளியீட்டை பண்டிகையாகவே கொண்டாடுவான் அதிலும் அத்திரைப்படம் பொங்கல் மாதிரியான சிறப்புப் பண்டிகையன்று வெளிவரும்போது அவனது கொண்டாட்டம் உச்சத்தில் இருக்கும், வரும் தை பொங்கலை முன்னிட்டு  நடிகர் அஜித் நடித்து திரைக்கு வரும் ’விஸ்வாசம்’ திரைப்படத்தை அவரின்  ரசிகர்கள் தல பொங்கலாகவே கொண்டாடி வருகின்றனர், அப்படிபட்ட ரசிகர்களின் கொண்டாட்டத்தை மேலும் சிறப்புடையதாக்க , நமது புதுயுகம் தொலைக்காட்சி மதுரை மன்னின் ரசிகர்களை கொண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ’’விஸ்வாச தல’’  நிகழ்ச்சியினை நடத்தியது. இதில் மதுரை மாவட்டத்தின் பல ரசிகர்கர்கள் கலந்து நடிகர் அஜித் மீது அவர்கள் வைத்திறுக்கும் அன்பினை வெளிபடுத்தியுள்ளனர், மேலும் தமிழர்களின் பாரம்பரியமான பறையிசையுடன் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்நிகழ்ச்சி பொங்கல் அன்று காலை 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள் …

‘பட்டி டூ சிட்டி’

நமது புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் பொங்கல் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியாக ‘பட்டி டூ சிட்டி’ என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது இதில் பின்னணிப் பாடகர்கள் மற்றும் நாட்டுப்புற பாடகர்கள் இரண்டு அணிகளாக பங்குபெற இருக்கிறார்கள் மேலும் பிரபல திரைப்படப் பாடகர்களும், நாட்டுப்புற கலைஞர்களும் இதில் பங்குபெற இருக்கிறார்கள். அதேபோல நிகழ்ச்சிக்கு இன்னும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாக வெஸ்டர்ன் இசைக்குழு மற்றும் நாட்டுப்புற இசைக்குழு என இரண்டு இசைக்குழுக்கள் இதில் பங்கு பெறுகின்றன. இந்நிகழ்ச்சி பொங்கல் அன்று காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது காணத்தவறாதீர்கள் …