கீழ்பாக்கத்துக்கு அனுப்பப்பட வேண்டியர் கிரண்பேடி

கீழ்பாக்கத்துக்கு அனுப்பப்பட வேண்டியர் கிரண்பேடி
Puducherry Governor Kiran Bedi to be sent to Kilpauk

புதுச்சேரி: காங்கிரஸ் முன்னால் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார், சந்திப்பு முடிந்து வெளியே வந்த இளங்கோவனிடம் புதுவை முதல்வர்- கவர்னர் இடையே நடைபெறும் மோதல் குறித்து நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:

கிரண்பேடி மனநிலை பாதித்தவர் போல் செயல்படுகிறார். கீழ்பாக்கத்துக்கு அனுப்ப வேண்டியவரை பிரதமர் மோடி புதுவைக்கு அனுப்பி வைத்து விட்டார்.

எத்தனை கிரண்பேடிகள் வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் நாராயணசாமியை ஒன்றும் செய்ய முடியாது. புதுவை மக்களின் பலத்தோடு நாராயணசாமி இவற்றை சமாளிப்பார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Puducherry Governor Kiran Bedi to be sent to Kilpauk