175 எபிசோடில் அடியெடுத்து வைக்கும் “ரெட் கார்ப்பெட்”

175 எபிசோடில் அடியெடுத்து வைக்கும் “ரெட் கார்ப்பெட்”

புதுயுகம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிகொண்டிருக்கும் நிகழ்ச்சி “ரெட் கார்ப்பெட்” .வெற்றிகரமாக இந்நிகழ்ச்சி 175 எபிசோடில் அடியெடுத்து வைக்கிறது .

தமிழ்த் திரையுலகச் செய்திகளை சூடாகவும் சுவையாகவும் பரிமாறும் நிகழ்ச்சி “ரெட் கார்ப்பெட்” திரையுலக நட்சத்திரங்களின் பேட்டி, ட்ரைலர் வெளியீடு, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, படபூஜை விழா ,ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, சக்சஸ் மீட் மற்றும், இயக்குனர்கள்,  நடிகர், நடிகைகள் அத்திரைப்படம் குறித்து பகிர்ந்துகொள்ளும் தமிழ் சினிமா பற்றிய சுவாரசிய தகவல்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக ஒளிபரப்புகிறது புதுயுகம் தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஜோஷுவா.