காம்பஸ்

புதுயுகம் தொலைக்காட்சியில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி காம்பஸ் கவுண்டவுன். எட்டு திசையும் கொட்டி கிடக்கும் செய்திகளை தொலைக்காட்சி நேயர்களுக்கு சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்கிறது இந்த நிகழ்ச்சி.
ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமாவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் அத்தனையும் சொல்லும் காம்பஸ் சினிமா பகுதி, பிரபலங்களின் ரகசியங்களை சொல்லும் காம்பஸ் சீக்ரட்ஸ், உலகில் தினந்தோறும் புத்தம் புதிதாக அறிமுகமாகும் தொழில் நுட்பங்களை உடனுக்குடன் நேயர்களுக்கு தெரிவிக்கும் காம்பஸ் அப்டேட்ஸ், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் தகவல்கள் மற்றும் வீடியோக்கள், உலகம் முழுவதும் நடைபெறும் விளையாட்டு போட்டிகளின் தகவல்கள் உட்பட அனைத்து தகவல்களையும் வழங்கும் களஞ்சியமாக இருக்கிறது காம்பஸ் கவுண்டவுன். அரை மணி நேரத்தில் உலகை சுற்றி வந்த உணர்வை கொடுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஸ்வாதிஷ்டா .