“அறிவோம் ஆரோக்கியம்”

“அறிவோம் ஆரோக்கியம்”
Pudhuyugam Tv Arivom Aarokkiyam

புதுயுகம் தொலைக்காட்சியில் அறிவோம் ஆரோக்கியம் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:00 மணிக்கும் மறுஒளிபரப்பாக மறுநாள் காலை 8:30 மணி வரையிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது

இந்த அறிவோம் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் 15 நிமிடங்கள் ஒளிபரப்பப்படும் ஆர்கானிக் அறுசுவை நிகழ்ச்சி நேயர்களுக்கு சிறந்த வரப்பிரசாதமாக பயனுள்ள வகையில் அமைகிறது. 

இவ்வகையில் ஆர்கானிக் அறுசுவை என்னும் இப்பகுதியில், இரசாயனத்தின்  வீரியமில்லாமல் இயற்கை உரங்களால் மட்டுமே விளைவிக்கப்பட்டு கிடைக்கக்கூடிய அரிய தானியங்கள், பயிர்கள், தாவரங்கள், காய்கறிகள், ஆகியவற்றின் மகத்துவத்தை உணர்த்தி, நம் தேசத்தின் தட்பவெப்பம், பாரம்பரியம் மற்றும் நமது நவீனகால வாழ்வியலுக்கு ஏற்றவகையில் அவற்றை சமைக்கும் விதம்  செய்து காண்பிக்கப்படுகிறது. சத்தான, நச்சுத்தன்மையில்லா உணவின் மூலமாக ஒவ்வொரு மானிடரின் ஆரோக்கியத்தையும் நவீன சிந்தனைகளுடன் மேம்படுத்துவதே இதன் அடிப்படை. நிகழ்ச்சியில் ஆர்கானிக் அறுசுவைகளை அறிமுகப்படுத்தி, உணவு வகைகளையும் செய்பவர்: திருமதி. தென்றல் மதுசூதனன்

Pudhuyugam Tv Arivom Aarokkiyam