பந்தயம்

பந்தயம்
Pudhuyugam TV new wisdom program Pandhayam

புதுயுகம் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் அறிவுப்பூர்வமாக தயாராகியுள்ள நிகழ்ச்சி தான் ‘பந்தயம்‘, இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் காலை 11:00 மணிக்கும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 8:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

அப்படி என இது வித்தியாசமான பந்தயம்..? இதுவரை ஒருவரது அறிவையோ, திறமையையோ அல்லது அதிர்ஷ்டத்தையோ அல்லது தைரியத்தையோ தனித்தனியே விளையாட்டாக வெளிக்கொண்டு வரும் போட்டிகளையே நாம் பார்த்திருப்போம். இந்த போட்டியில் அறிவு, அதிர்ஷ்டம் தைரியம் மூன்றையும் கலந்து வெற்றி பெற வேண்டும்.

பொதுவாக சூதாடுதல் தவறு தான். ஆனால் இது அறிவுச்சூதாட்டம்.. உங்கள் அறிவை வைத்து தைரியத்துடன் சூதாடி அதிர்ஷ்டத்தை திறமையோடு வெல்லும் ஓர் விளையாட்டு நிகழ்ச்சி. இந்த விளையாட்டினை இரண்டு அணிகள் விளையாடும். இதன் அரங்கம் ஒரு கேஸினோ (casino) வை போல் அமைக்கப்பட்டிருக்கும்.

இரண்டு தொகுப்பாளர்கள் இவர்களிடையே விளையாடுவார்கள். ஒவ்வொரு அணியிலும் 7 பேர் பங்கு பெறுவர். இவர்கள் நண்பர்களாகவோ குடும்ப உறுப்பினர்களாகவோ இருக்கலாம். ஒவ்வோர் அணியிலும் குறைந்தபட்சம் 2 ஆண் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். தொகுப்பாளர்கள் விகாஷ் மற்றும் பூஜிதா நிகழ்ச்சியை துவக்குவார்கள்.

இந்த விளையாட்டினை இரண்டு அணிகள் விளையாடும். இதன் அரங்கம் ஒரு கேஸினோ ( Casino) வை போல் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு தொகுப்பாளர்கள் இவர்களிடையே விளையாடுவார்கள். ஒவ்வொரு அணியிலும் 7 பேர் பங்கு பெறுவர். இவர்கள் நண்பர்களாகவோ குடும்ப உறுப்பினர்களாகவோ இருக்கலாம். ஒவ்வோர் அணியிலும் குறைந்தபட்சம் 2 ஆண் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் உள்ளே வெளியே, லங்கர் கட்டை, ரீ ஜாய்ன், பந்தயம், மாஸ் ரவுண்ட் என 5 சுற்றுக்கள் உண்டு.

குறிப்பு : இதில் பங்கேற்கும் போட்டியாளரின் வயது 18 முதல் 35 வயது வரை இருக்கலாம். ஒவ்வோர் அணியிலும் குறைந்த பட்சம் 2 ஆண் 2 பெண் உறுப்பினர் இருத்தல் அவசியம். மேலும் இந்த நிகழ்ச்சி பற்றிய மெருகூட்டல்களுக்கும், சந்தேகங்களுக்கும் தொடர்பு கொள்ள- கல்யாண் (நிகழ்ச்சி தயாரிப்பாளர்)- 9841246326.

Pudhuyugam TV new wisdom program Pandhayam