“திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா”
“திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா”
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலைக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6 அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது, தொடர்ந்து மாலையில் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை தரிசிக்க பல்லாயிரக்கணக்கானோர் வருகின்றனர். இந்த நிகழ்வை திருவண்ணாமலையிலிருந்து டிசம்பர் 6 மாலை 5:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்ப படுகிறது.