மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் தற்கொலை

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் தற்கொலை
Protest against modi youth commits suicide in TN

ஈரோடு: காவிரி வேளாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (25) பொம்மை வியாபாரி, இவர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலிருந்து மண் எண்ணை கேனுடன் வெளியே வந்தார். தனது வீட்டு சுவற்றில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா? இல்லையா? தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது”- பா.தர்மலிங்கம்.

இவ்வாறு அந்த சுவற்றில் மஞ்சள் கலர் சாக்பீசால் எழுதி வைத்திருந்தார்.

பிறகு தான் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். தர்மலிங்கம் உடலில் எரிந்த தீயை அணைத்து உடனடியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அக்கம் பக்கத்தினர் சேர்த்தனர், அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பரிதபமாக உயிரிழந்தார்.

Protest against modi youth commits suicide in TN