ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் மீது போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய்பீம் படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக கூறி சூர்யா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேளச்சேரி போலீஸ் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பான வழக்கை ஜூலை 21க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.