போ புயலே.. போய்விடு... நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை!

சென்னை : நிவர் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து புயல் குறித்த கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

போ புயலே
போய்விடு

பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்

வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்

குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்

பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்

சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு

ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்? ”
என்று பதிவிட்டுள்ளார்.