+1 வகுப்புக்கும் அரசு பொதுத்தேர்வு

+1 வகுப்புக்கும் அரசு பொதுத்தேர்வு
Plus 1 students will also have public exam says Sengottaiyan

சென்னை: தமிழகத்தில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன, அதன்படி பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டு புதிய முறை கொண்டு வரப்பட்டது. வரும் 19-ந்தேதி வெளியிடப்படும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளும் இதே முறையில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

மேலும், பிளஸ்-1 பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும், நுழைவுத் தேர்வுகளை சந்திக்கும் வகையில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Plus 1 students will also have public exam says Sengottaiyan