“பா” - இசைப்பயணம்

“பா” - இசைப்பயணம்

பெப்பெர்ஸ் டிவியில் "பா " எனும் இசை நிகழ்ச்சி தொலைக்காட்சி நேயர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாரம்தோறும் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் , கர்நாடக இசைப்பாடகர்கள் கலந்து கொண்டு அவர்களது இசை அனுபவம் , சாதனைகள், மற்றும் விருதுகள் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர் .

இந்நிகழ்ச்சியில் இதுவரை இசை மேதைகளான கத்ரி கோபால்நாத், விக்கு விநாயக், டிரம்ஸ் சிவமணி, TMT. பாலாம்பாள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் .

இந்நிகழ்ச்சியில் வரும் வாரத்தில் பின்னணி பாடகி மது ஐயர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது . இவர் சின்ன திரைகளில் ரியாலிட்டி ஷோக்களில் ஆரம்பித்து வெள்ளித்திரை காலடி பதித்த இவர் பல முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா , ஜிப்ரான்  ஆகியோர் இசையமைத்த படங்களுக்கு பாடியுள்ளார் .சமீபத்தில் பேரன்பு படத்திலும் பாடியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகியாக எப்படி வாழ்க்கையை தொடங்கினார், குரு, இசை, நண்பர்கள் , இசையமைப்பாளர்கள் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் . இந்நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிறு காலை 11:00 மணிக்கு பெப்பெர்ஸ் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது .