“படித்ததில் பிடித்தது”

“படித்ததில் பிடித்தது”

உங்கள் பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் “படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இது வரை இந்த நிகழ்ச்சியில் இறையன்பு ஐ ஏ எஸ், எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பேச்சாளர் கு.ஞானசம்பந்தன், முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் கலியமூர்த்தி , நந்தகுமார் ஐ .ஆர் .எஸ்  ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.                       

அந்த வகையில் வரும் வாரம் படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில் எழுத்தாளர் கண்மணி ராஜா முகமது கலந்துகொண்டு, அவரது வாழ்க்கையில் தன்னை கவர்ந்த , எழுத ஊக்குவித்த தன் பாதையை மாற்றி வாழ்க்கைக்கு வழி காட்டிய , மனதை பாதித்த  தாக்கங்கள் பற்றி உணர்வுப் பூர்வமாகப் மூன்று புத்தகத்தை பட்டியலிடுகிறார்.               

இவர் கலந்து கொண்ட படித்ததில் பிடித்தது நிகழ்ச்சி, பெப்பர்ஸ் டிவியில் சனிக்கிழமை தோறும் காலை 11:00 மணிக்கு  ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள் .