பெப்பர்ஸ் டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் - 2019

பெப்பர்ஸ் டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் - 2019

கவிஞரும் காதலும் - கவிஞர் அறிவுமதி

15க்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளை வெளியிட்டவரும் பிரபல திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் அறிவுமதி தன்னுடைய திரைப்பயணத்தையும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட பாடல்களைப் பற்றியும் மனம் திறக்கிறார்.

என் ரூட்டு செம டாப்பு - பின்ணணி பாடகர் வேல்முருகன்

 தன்னுடைய குரல்வளத்தால் 25 சூப்பர் ஹிட் பாடல்கள் பாடிய திரைப்பட பின்ணணி பாடகர் வேல்முருகன் தான் நேசித்து சுவாசித்த கிராமப்பாடல்களை நேயர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்

டான்ஸ் தளபதி - நடன இயக்குனர் ஷெரிப்

நடிகர் விஜய் படங்களில் நடன இயக்குனராகவும் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலுக்கு நடனம் அமைத்தவருமான ஷெரிப் ரஜினிக்கும் விஜய்க்கும் நடனம் சொல்லித்தந்தது எப்படி என்பதை வெளிப்படையாகவும் நகைச்சுவையாகவும் விவரிக்கிறார்.

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு ஆல்பம் பாடல் மூலம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த நாட்டுப்புறபாடகி சின்னப்பொண்ணு நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடிய தஞ்சையில் தான் ரசித்த வாய்க்காலையும் வரப்புகளையும் பாடல்களாக பாடுகிறார்.