பேசும் ஓவியம்

பேசும்  ஓவியம்
Peppers Tv August 15th Independence day Special

பெப்பர்ஸ் டிவியில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பேசும் ஓவியம் நிகழ்ச்சியில் பிரபல ஓவியர் ஸ்ரீதர் தன் அனுபவங்களை அசை போடுகிறார்.

இவர் சமீபத்தில் திறக்கப்பட்ட அப்துல் கலாம் மணிமண்டபத்தில் உள்ள அனைத்து ஓவியங்களையும் வரைந்தவர். அப்துல் கலாமின் சிலையை வடிவமைத்தவரும் இவரே. ஸ்ரீதரின் ஓவியங்கள் இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் புகழ் பெற்றவை.

புகழ் பெற என்ன நுணுக்கங்களை கடைபிடித்தார் என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசியதே இந் நிகழ்ச்சியின் சிறப்பு. பெப்பர்ஸ் டிவியில் ஆகஸ்ட் 15 செவ்வாய் அன்று காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஸ்ரீதருடன் உரையாடுபவர் ஸ்ரீதேவி.

Peppers Tv August 15th Independence day Special