ஹை 5 (Hi 5)

ஹை 5 (Hi 5)
Peppers TV show Hi 5

(ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு 9:30 மணிக்கு)

விதைக்கப்படும் அனைத்து விதைகளும் பயிர் ஆவதில்லை. அதில் ஒரு சில விதைகள் மட்டுமே பயிராகிறது. ஒவ்வொரு வாரமும் தமிழ் திரைப்படத் துறை புதிய திரைப்படங்களை வெளியிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸிஸுக்கு வருகிறது.

திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களை வாரந்தோறும் வரிசைப்படுத்தி அவற்றின் சிறப்பியல்புகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சி ஹை 5 (HI 5)) என்னும் தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு 9:30 மணியளவில் பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அந்த வாரம் வெளியான திரைப்படங்களை திரையிட்டிருக்கும் தியேட்டர்களின் திரையரங்க உரிமையாளர்களை தொடர்பு கொண்டு படத்தின் சிறப்பு பற்றி அளவளாவுகிறார்கள். வெளியான திரைப்படங்களுக்கு விநியோக உரிமை பெற்றிருப்பவர்களுடனும் கலந்து பேசி படம் பற்றிய கருத்துக்களை உள்வாங்கி கொண்டு அந்த அடிப்படையில் அந்த வாரத்தின் முதல் சிறந்த 5 படங்களை இந்த நிகழ்ச்சியில் தர வரிசைப்படுத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ தேவி தொகுத்து வழங்கிறார் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு 9:30 மணியளவில் பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.

Peppers TV show Hi 5