“படித்ததில் பிடித்தது”

“படித்ததில் பிடித்தது”
Peppers TV program Padithathil Pidithathu

(ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு)

உங்கள் பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் “படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இறையன்பு ஐ ஏ எஸ், எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வரும் வாரம் படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில் உலகப்புகழ்பெற்ற பேச்சாளர், முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் கலியமூர்த்தி கலந்துகொண்டு, தான் படித்த புத்தகங்கள் அவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி உணர்வுப் பூர்வமாகப் பகிரவுள்ளார்.

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கிணங்க, உலகம் முழுவதிலும் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் இவரது பேச்சைக் கேட்க, மக்கள் கூட்டம் அலைமோதும் என்றால் அது மிகையாகாது.

இவர் கலந்துகொண்ட படித்ததில் பிடித்தது நிகழ்ச்சி, பெப்பர்ஸ் டிவியில் ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்.

Peppers TV program Padithathil Pidithathu