குளோபல் கிச்சன்

குளோபல் கிச்சன்
Peppers TV program Global Kitchen

(ஞாயிறு தோறும் காலை 11:00 மணிக்கு)

பெப்பர்ஸ் டிவி யின் புதுமையிலும் புதுமையான நிகழ்ச்சி “குளோபல் கிச்சன்”. இந்திய அளவில் பல்வேறு வகையான சுவைமிக்க உணவுகளை உண்ட நமக்கு உலகளாவிய அதாவது கொரியன், அமெரிக்கன், இத்தாலியன், திபெத்தியன், சைனீஸ், மெக்ஸிகன் போன்ற மேல் நாட்டு மக்களின் அன்றாட உணவுகளை சுவைத்து இருக்கிறோமா ?

இதுவரை பெப்பர்ஸ் டிவி யில் நீங்கள் ஸ்டிர் பிரை, தட்டுக்கடை, ஸ்டுடியோ கிட்சன், சமையல் மேடை போன்ற இந்திய மற்றும் பாரம்பரிய உணவுகளின் நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள், இப்பொழுது குளோபல் கிட்சன் என்னும் நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் அமைந்துள்ள சர்வதேச ரெஸ்டாரெண்ட்களிலிருந்து அதாவது சர்வதேச உணவுகளின் சிறப்பு மற்றும் அதன் தயாரிப்பு முறை, 6 அந்நாட்டு மக்களின் உணவு பழக்கவழக்கங்கள் அதுமட்டுமில்லாமல் அவர்களின் வித்தியாசமான சுவைகொண்ட உணவுகளை தொகுத்து வழங்க இருக்கிறோம். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் தீப்தி.

Peppers TV program Global Kitchen