உலக பத்திரிகை சுதந்திர தினம்: மோடி வாழ்த்து

உலக பத்திரிகை சுதந்திர தினம்: மோடி வாழ்த்து
PM Modi greets on World Press Freedom day

புது டெல்லி: மே மாதம் 3-ம் தேதியான இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் என்பதால், பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது "ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான அதேசமயம் ஆக்கப்பூர்வமாக செயல்படும் பத்திரிகைகள் மற்றும் ஊடகம் என்பது மிக முக்கியமான அமைப்பாகும். நவீன யுகத்தில், சமூக ஊடகங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்த காலத்தில் ஊடகத்தின் பங்களிப்பு புறக்கணிக்க முடியாததாக மாறியுள்ளது. எனவே, சுதந்திரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பத்திரிகையாளர்கள் செயல்படுவதற்கான களம் தற்போது அமைந்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

PM Modi greets on World Press Freedom day