எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ‘ஷாப்பிங்’ வசதி

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ‘ஷாப்பிங்’ வசதி
Onboard Shopping in Express trains soon in India

மும்பை: மத்திய ரெயில்வே சார்பில் மும்பையில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு நீண்டதூர ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை எக்ஸ்பிரஸ், கோனார்க் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரெயில்களின் ஏ.சி. பெட்டியில் பொருட்கள் வாங்கும் வசதியை (ஷாப்பிங்) ரெயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.

இதன்படி பயணிகள் அழகுசாதன பொருட்கள், ஹெட்போன் மற்றும் பயணத்தின் போது தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்படும் இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக மற்ற ரெயில்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Onboard Shopping in Express trains soon in India