வருகிறது "அம்மா டி.வி"

சென்னை: முன்னால் முதல்வர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து அ.தி.மு.க. கட்சி இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், "அம்மா டி.வி" என்ற பெயரில் புதிய டெலிவிஷன் சேனல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
24 மணி நேர செய்தி சேனலான இந்த டி.வி. விரைவில் தொடங்கப்பட இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.