ஓ.பி.எஸ். தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கின்றனர்

ஓ.பி.எஸ். தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கின்றனர்
OPS team is not intrested in negosiation to form AIADMK

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க. அணி இரண்டாக பிளவுபட்டது, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தலைமையில் (அ.தி.மு.க. அம்மா) அணியும், ஓ.பி.எஸ். தலைமையில் (அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா) அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த முன்னால் அமைச்சர் செம்மலை "ஓ.பி.எஸ்.அணி, அ.தி.மு.க. (அம்மா) அணியுடன் இணையக் கூடாது என்று நிர்வாகிகள் கருத்து தெரிவிப்பதாகவும், இதை தலைமையிடத்தில் தெரிவிப்பேன் என்றும் கூறி இருந்தார்."

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:

அ.தி.மு.க. இரு அணிகளும் இணையக்கூடாது என்று செம்மலை சொல்லும் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தா? இல்லையா? என்பதை ஓ.பன்னீர்செல்வம் தான் விளக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். காலம் கனிந்த பிறகும் ஓ.பி.எஸ். தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள்.

புரட்சித்தலைவி அம்மாவின் (ஜெயலலிதா) ஆசியால் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டு மட்டுமல்ல, அதற்கு மேலும் தொடரும். மக்கள் இந்த ஆட்சியைத் தான் விரும்புகிறார்கள்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள சிறு சலசலப்பை வைத்து சைக்கிள் கேப்பில் ஆட்சியை பிடிக்கலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

OPS team is not intrested in negosiation to form AIADMK