தமிழகத்தில் தனது பங்களிப்பை வலுப்படுத்திய ஓபோ ரெனோ

தமிழகத்தில் தனது பங்களிப்பை வலுப்படுத்திய ஓபோ ரெனோ

சென்னை: பன்னாட்டு முன்னணி ஸ்மார்ட்ஃபோன் பிராண்டான ஓபோ தமிழகத்தில் தனது சந்தைப் பங்கை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.  2019 மே இறுதி வரை சென்னையில் மட்டும் ஓபோ சந்தைப் பங்கு 20% ஆகும்.  தொடர் கண்டுபிடிப்புகள் மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவை காரணமாக இந்தியாவில் ரெனோ வரிசை அறிமுகம் மூலம் பிரிமியம் பிரிவில் வளர்ச்சியை எட்டுமென ஓபோ நம்புகிறது. 

தனது திட்டப் பணிகளில் வாடிக்கையாளர்களை மையப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓபோ தென் இந்தியாவில் தனது பங்கை வளர்க்கத் தீவிர கவனம் செலுத்தியதுடன் தங்களது ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் எளிதான அணுக்கத்தை உறுதிப்படுத்தியது.  ஆஃப்லைன் பிரிவில் முன்னணி வகிக்கும் ஓபோ தமிழகம் முழுவதும் வலுவான சில்லரை வணிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வலையமைவை உருவாக்கி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3000 மற்றும் சென்னையில் மட்டும் 1000 விற்பனைப் புள்ளிகள் இருக்கின்றன. வாடிக்கையாளர் அனுபவத்தை விரிவுபடுத்த ஓபோ தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு முன் சேவை தொடங்கி விற்பனைக்குப் பின் பழுது பார்க்கும் சேவை வரை  முழுமையான சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.   விற்பனைக்குப் பின் பழுது பார்க்கும் சேவைக்காகப் பிரத்யேக ஓபோ எக்ஸ்பீரியன்ஸ் கன்சல்டண்ட்ஸ் பிரிவையும் அமைத்துள்ளது. தமிழகத்தில் 20 பழுது பார்க்கும் சேவை மையங்களைக் கொண்ட ஓபோ ஒரு மணி நேரத்துக்குள் 90% வெற்றி விகிதத்தில் பழுது பார்ப்பதாக கூகிள் விமர்சனங்கள் பாராட்டியுள்ளன.  

இது குறித்து ஓபோ இந்தியா சிஇஓ சார்ல்ஸ் வோங்க் கூறுகையில் ‘பிராந்தியத்துக்கு பிராந்தியம் மாறுபடும் வகையில் பல்வகை வாடிக்கையாளர்களைக் கொண்ட நாடு இந்தியா என்பதால் சந்தைப் புரிதலை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய உறுதி பூண்டுள்ளோம்.  எங்களின் வளர்ச்சிப் பாதைக்கு தென் இந்தியா தொடர்ந்து ஊக்கமளித்து வருவதால், அந்தப் பிராந்தியத்திலுள்ள வாடிக்கையாளர்கள் இடையே பிராண்ட்  முன்னுரிமையை உருவாக்க ஒபோ தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. எங்கள் கடுமையான உழைப்புக்குக் கிடைக்கும் பலனே இந்தச் சந்தையில் ஓபோவின் வளர்ச்சிக்கான சான்றாகும்’ என்றார். 

ஓபோ சிஇஓ சார்ல்ஸ் வோங்க் மேலும் தொடர்கையில் ‘இந்தியாவில் அறிமுகமாகும் ரெனோ வரிசை பிரிமியம் பிரிவில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமென நம்புகிறோம். வாடிக்கையாளர்களுக்குக் காட்சித் தொடர்பு, நிழற்படம், பொழுதுபோக்கு, சமூக அனுபவம் உள்ளிட்ட புது சகாப்தத்தை ரெனோ வழங்கும்.  ரெனோ வரிசைக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பிரிமியம் ஸ்மார்ட்ஃபோன் சந்தைக்குப் புத்துயிரூட்டுவதன் மூலம் எங்கள் புதிய அறிமுகம் எதிர்கால வளர்ச்சியைப் பெறுமென உறுதியாக நம்புகிறோம்’ என்றார். 

பிரிமியம் பிரிவில் அதிகம் விரும்பப்படும் புதுமையான ஹேண்ட்செட் பிராண்ட் ஓபோ என சைபர் மீடியா ரிசர்ச் என்னும் தனியார் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகமான ஓபோ ரெனோ வரிசை வாடிக்கையாளர்களின் பரவலான பாராட்டுகளை ஏற்கனவே குவித்து வருகிறது.  ஓபோ ரெனோ 10x ஜூம் (8+256 ஜிபி) விலை ரூ 49,990/- மற்றும் 6+128ஜிபி விலை ரூ 39,990/- ஆகும்.  ரெனோ 10x ஜூம்-இல் உள்ள ட்ரிப்பிள் ரியர் கேமரா 10x ஹைப்பிரிட் ஜூம் தொழில்நுட்பத்துக்கு ஆதரவளிப்பதுடன்,  ஷார்க்-ஃபின் ரைசிங்க் ஃப்ரண்ட் கேமராவுடன் கூடிய உலகின் முதல் பெரிஸ்கோப் டெலிஃபோடோ லென்ஸ் என்னும் பெருமையையும் பெறுகிறது. மேலும் இதிலுள்ள க்வால்கம் ஸ்நாப்டிராகன் 855 புராசஸர் மற்றும் ஹைப்பர் பூஸ்ட் 2.0 தங்கு தடையற்ற கேமிங்க் அனுபவத்தைத் தரும்.  இந்த ஸ்மார்ட்ஃபோனிலுள்ள விஓஓசி 3.0 ஃப்ளாஷ் சார்ஜ், 4065 எம்ஏஹெச் பேட்டரி ஆகியவை கூடுதல் சிறப்பாகும்.  ஓபோ ரெனோ 10x ஜூம் (8+256 ஜிபி) அமேசான்.இன், ஸ்நாப்டீல்.காம், பேடிஎம், டாடாக்ளிக்.காம் ஆகிய தளங்களிலும், இந்தியா முழுவதும் ஆஃப்லைனிலும் கிடைக்கும். ஓபோ ரெனோ 10x ஜூம் (6+128ஜிபி) ஃபிளிப்கார்ட் தளத்திலும், இந்தியா முழுவதும் ஆஃப்லைனிலும் கிடைக்கும்.  

ஒபோ அறிமுகப்படுத்தியுள்ள ரூ 32,990/- விலையுள்ள ஓபோ ரெனோ (8+128 ஜிபி) ஸ்மார்ட்ஃபோன் ஸ்நாப்டிராகன் 710 சிப்-ஐப் பயன்படுத்துவதுடன் ரெனோ வரிசை முக்கிய அம்சங்களான ஷார்க் ஃபின் ரைசிங்க் கேமரா கட்டமைப்பு, 48 எம்பி ஹை டெஃபனிஷன் மெயின் கேமரா, அல்ட்ரா நைட் மோட் 2.0, விஓஒசி 3.0 ஆகியவற்றுக்கும் ஆதரவளிக்கும். இது அமேசான்.இன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்ஸ்களிலும் கிடைக்கும். 

நுகர்வோருக்கு உதவும் வகையில் புத்திசாலித்தனமாகவும், வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் பல சாதனைகளைப் படைக்கவும் உறுதி பூண்டுள்ளது ஓபோ. எதிர்காலத்தில் முன்னிலை வகிக்கவும், வாடிக்கையாளர்களின் பிரபல கலாச்சார மற்றும் தொழில்நுட்ப பிராண்டாக விளங்கவும் ஓபோ தொடர்ந்து முனைவுகளை மேற்கொள்ளும்.  ஐதராபாத்திலுள்ள ஆய்வு & வளர்ச்சி மையத்தில் தனது கண்டுபிடிப்புகளைத் தீவிரப்படுத்தவும், கிரேட்டர் நோய்டாவிலுள்ள அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகப்படுத்தவும் ஓபோ திட்டமிட்டுள்ளது.