ஸ்டெர்லைட் ஆலையை யாராலும் திறக்க முடியாது

ஸ்டெர்லைட் ஆலையை யாராலும் திறக்க முடியாது
No one can open Sterlite Plant says Jayakumar

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதாக சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க நானும், திமுக எம்எல்ஏக்களும் தயாராக உள்ளோம். முதல்வர் தயாராக உள்ளாரா என்பதை தெரிவிக்கட்டும்” என கூறியிருந்தார்.

மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால், சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக பங்கேற்க தயார்” எனவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம் என்பது குறித்து, வருடம் முழுவதும் விவாதிக்க தயாராக உள்ளோம். ஸ்டாலின் தயாராக உள்ளாரா?. சட்டப்பேரவைக்கு வந்து திமுக பேசட்டும். அவர்களது துரோகத்தை நாங்கள் கூறுகிறோம்” என்றார்.

மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான், அரசாணை எங்கே போனாலும் செல்லும். ஐநா சபைக்கே சென்றாலும் இனி ஆலையை திறக்க முடியாது” என ஜெயக்குமார் கூறினார்.

No one can open Sterlite Plant says Jayakumar